
பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணை ,ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வரும் 30-ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு தரப்பட்டவர்களும் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.இவர்களின் கோரிக்கையை ஏற்று பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலும் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராத நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான கெடுவும் செப். 30-ஆம் தேதியிலிருந்து 2022, மாா்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பினாமி சொத்து பரிவா்த்தனை தடைச் சட்டம் 1988-இன் கீழ் உத்தரவு வழங்கும் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடுதல், உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலமும் 2022, மாா்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.