
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் ஜே.இ.இ. மெயின் தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 334 நகரங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் 9.34 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 18 பேர் முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து 4 பேர், ராஜஸ்தானில் இருந்து 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை பெற.. JEEMainResult2021