
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2021-2022 ஆம் கல்வியாண்டில் , 11 பட்டப்படிப்புகளை , 18 உறுப்பு மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்குகிறது.இந்நிலையில் இன்று முதல் மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற இருக்கிறது.
மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் கல்வி கற்பிப்பதில் உலகத்தரம் வாய்ந்த ஒரு முதன்மை நிறுவனமாகும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த உயர்கல்வி படிப்புகளை வழங்குவது , வேளாண்மை ஆராய்ச்சிகளை மேற்கொள்வது. இந்திய மற்றும் உலக அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுடனும் , ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் இணைந்து தரமான கல்வியை வழங்குவது போன்றவற்றினை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.