
தொல்லியல் துறையில் 2021 – 2023 ஆண்டுக்கான முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொல்லியல் துறை முதுநிலைப் பட்டயப் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான மொத்த காலிப்பணியிடங்கள் 20 ஆகும். ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.5000 பயிலுதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தொடங்க உள்ள இரண்டாண்டு கால முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு (post graduate diploma in archaeology) விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பத்தை தொல்லியல் துறை இணையதளத்தின் https://www.tnarch.gov.in/ மூலமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 16.09.21 என்றும், மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.