
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.தற்போது பெரும்பாலான நாடுகளில் 12- வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி கியூபாவில் தொடங்கப்பட்டுள்ளது. அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12-வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை கியூபா தொடங்கியது. இந்த சூழலில், திங்கள்கிழமை முதல் 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை கியூபா தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கியூபாவில் போடப்பட்டு வரும் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் கியூபாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.