
நிபா வைரஸ் ஆனது முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்டது.மேலும் இது குரங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்று தெரிய வந்ததுள்ளது.உயிர் கொல்லி நோயான நிபா வைரஸ் மேலும் பரவி விடாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இதற்கான தடுப்பூசி மருந்தை தற்போது இங்கிலாந்தில் உள்ள ஜென்னர் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.
நிபா வைரஸ் தடுப்பூசியானது வைரசின் மரபணுவை பகுத்தாய்வு செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தடுப்பூசியானது 8 வகையான குரங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டு,பின்பு நன்றாக வேலை செய்வது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பச்சை வகை குரங்கின் வைரசை இந்த தடுப்பூசி முழுமையாக அழிப்பது ஆய்வில் தெரிகிறது.இன்னும் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற இருக்கின்றன.இதிலும் வெற்றி கிடைத்தால் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துக்கு ‘சாட் ஆக்ஸ் &1’ என்று பெயரிடப்பட்டுள்ளது.