பாராலிம்பிக் போட்டி : வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரவீன்குமார்..

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பிரிட்டன் வீரருடன் கடும் போட்டி நிலவிய நிலையில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன்குமார் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 18 வயதே ஆன பிரவீன்குமார் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பங்குப்பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்திய வீரர் பிரவீன்குமார், பிரிட்டன் வீரர் ஜோனதன் உடன் கடும் போட்டியில் ஈடுப்பட்டு தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார்.பாராலிம்பிக் போட்டியில் 2.10 மீட்டர் உயரம் தாண்டி பிரிட்டன் வீரர் ஜோனதன் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு பாராலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

Next Post

புதிய உருமாறிய ‘மு’ வைரஸ் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..

Fri Sep 3 , 2021
‘மு’ என்று அழைக்கப்படும் புதிய உருமாறிய வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பி விடுகிற அறிகுறிகள் தென்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.மேலும் தென் அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் இந்த வைரஸானது வெளிப்பட்டுள்ளது. இந்த புதிய உருமாறிய ‘மு’ வைரஸ் கடந்த ஜனவரி மாதம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் முதன்முதலாக காணப்பட்டது. இதன் உருமாறிய வடிவம் பி.1.621 ஆகும். எனவே இது ‘மு’ வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. […]
mu-virus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய