2010 – ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை செயல்படுத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..
- தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு.
- பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.
- வேறு மொழிகளில் படித்து, தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது- தமிழ்நாடு அரசு.
- தனித் தேர்வர்களுக்கும் இட ஒதுக்கீடு பொருந்தாது.
- தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரியாக ஆராய்ந்த பின்னரே, இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் செய்யப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
மேலும் படிக்க.. Release of Guidelines