
டோக்கியோ பாராஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
டெல்லியை சேர்ந்த 24 வயதுடைய யோகேஷ் பெற்றுள்ள வெள்ளியால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இந்தியா இதுவரை, ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.