
தமிழகத்தில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது.
- கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடரும்.
- மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.
- மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை.
- தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
- நோய்த்தொற்று உள்ள மாணவர்களை கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் RT-PCR சோதனை எடுக்க வேண்டும்.
- கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.