இந்தியாவில் 25 ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 25,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,24,49,306 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 389 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,756 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,16,80,626 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,169 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,33,924 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 7,95,543 தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை 58,25,49,595 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

B.E., B.Tech., மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு : உயர்கல்வித்துறை அறிவிப்பு..

Mon Aug 23 , 2021
தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேர்வதற்க்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மாணவர்களின் கட் – ஆப் உயர்ந்து, அதிக மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளனர். இதன் காரணமாக தரவரிசைப் பட்டியலில் ஒரே மதிப்பெண்களை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் […]
Engineering-students-admission-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய