
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்
- 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, நீர்வள ஆதாரத்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை போன்ற உழவர் நலன் சார்ந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் பலன்கள் ஒட்டு மொத்த கிராம வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒருங்கிணைக்கப்படும். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.34,220.65 கோடி நிதி ஒதுக்கீடு.
- நெல் விவசாயிகளின் நலனுக்காக, நெல்லிற்கான கொள்முதல் விலை சாதாரண இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,015 ம், சன்ன இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 என உயர்த்தி நிர்ணயம். இதற்காகும் கூடுதல் செலவினத்தொகை ரூ.99.38 கோடி, ஆக மொத்தம்ரூ.319.38 கோடி ஒதுக்கீடு.
- மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ.33.03 கோடியில் செயல்படுத்தப்படும்.
- பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம்.
- மழை நீரினை சேமித்து, பயிர் உற்பத்தியை பெருக்க விவசாயிகளின் வயல்களிலேயே 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
- மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க, ரூ.10,000 /- வீதம் 1,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
- தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.12.50 கோடி, புதிதாக 10 உழவர் சந்தைகளை உருவாக்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு.
- சென்னை மாநகராட்சியில் கொளத்தூர் பகுதியில் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான நவீன விற்பனை மையம் துவங்க ரூ.1 கோடி.
- மின்னணு ஏலம் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருளுக்கு உரிய விலை பெற இணையதளம் மற்றும் சிறப்பு மென்பொருளுக்காக ரூ.10 கோடி.
- கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்ச நல்லூர் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை
1 .பனை மரத்திற்கு முக்கியத்துவம் :
- ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்
- ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை
- பனை மரங்களை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.
- பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.
- பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும்.
2 .5 மாவட்டங்களில் தொழிற்பயிற்சி மையங்கள்
- தமிழகத்தில் திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் சிறப்பு விளைபொருள்களுக்கு ஏற்ப தொழில் கற்கும் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் திருச்சி உள்பட 5 மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் சிறப்பு விளைபொருள்களுக்கு ஏற்ப தொழில் கற்கும் மையங்கள் அமைக்கப்படும்.
- கோவையில் தேங்காய், திருச்சியில் வாழை, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், விருதுநகரில் சிறுதானிய தொழில்கற்கும் மையங்கள் உருவாக்கப்படும்.
- அதுபோல, நாகையில் மீன் பதப்படுத்தும் தொழில் கற்கும் மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- மேலும், கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
3.முருங்கைக்காய் சிறப்பு ஏற்றுமதிக்கு மையம்
- முருங்கைக்காய் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை அதிகரிக்க முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் ஏற்படுத்தப்படும்.
- 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும்.
4.உழவர் சந்தைகளுக்கான அறிவிப்புகள்
- உழவர் சந்தையில் வெளி மார்க்கெட் விலை மற்றும் உழவர் சந்தை விலை அடங்கிய டிஜிட்டல் போர்டு வைக்கப்படும்.
- மின்மோட்டார், பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
- 50 ஊழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு.
- உழவர் சந்தை கழிவுகளை உரமாக்கும் திட்டம் 25 உழவர் சந்தைகளில் ரூ.2.75 கோடியில் செயல்படுத்தப்படும்.
- கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, வேலூர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
5 .கரும்பு விவசாயிகளுக்கான திட்டங்கள்
- 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்.
- கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- 2021-22ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் மத்திய-மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.
- வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக ஆக்குவதில் அரசு தீவிரம் கவனம் செலுத்தும்.