தமிழக பட்ஜெட் 2021-22 : நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன ?

தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

  • தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு
  • காவல் துறையிலுள்ள 1,33,198 பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
  • தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு
  • தமிழக காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு
  • உணவு மானியத்திற்கான நிதி ரூ.8,437.57 கோடியாக உயர்வு
  • மீன்வளத்துறைக்கு ரூ.303.66 கோடி நிதி ஒதுக்கீடு
  • மீனவர்கள் நலனுக்கு 1,149.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • புதிதாக 6 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்
  • சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள ‘செம்மொழி தமிழ் விருது’ இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்.
  • ரூ.400 கோடி ஒதுக்கீட்டில் தூய்மை பாரதம் இயக்கம் செயல்படுத்தப்படும்
  • 100 நாள் வேலைவாய்ப்பை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
    சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்; ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
  • சீர்மிகு நகர திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு; அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு
  • கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்
  • நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பான பங்களிப்பவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்
  • மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்; நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியிட்டு தெருவிளக்குகள் அமைக்கப்படும், நீர்நிலைகளை மீட்டெடுக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு என கூறினார்.

சென்னைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய திட்டங்கள் என்னென்ன ?

  • சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். அதன்படி, சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.
  • சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்.
  • சென்னையுடன் இணைந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சென்னை மாநகரத்தில், பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்.
  • சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள்
  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதிநிதி ரூ.3 கோடியாக மீண்டும் அளிக்கப்படும்.
  • ரூ.100 கோடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய நமக்கு நாமே திட்டம் மீண்டும் துவக்கப்படும்.
  • சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.

Next Post

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 40,120 பேருக்கு கொரோனா தொற்று..

Fri Aug 13 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 40,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,254 ஆக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை […]
covid19-virus-vaccine-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய