
தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- அதன் அடிப்படையில் தீவிரம் இல்லாத கொரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 5000 என்று நிர்ணயம் செய்துள்ளது.
- ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ. 15,000 என இருந்த நிலையில் தொகுப்பாக ரூ. 7,500 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
- மேலும் வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ. 30,000 மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ. 25,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- கடுமையான சுவாச செயலிழப்பு ஏற்பட்டு வெண்டிலேட்டர் தேவையில்லையெனில் தொகுப்பு கட்டணம் ரூ. 27,100 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.