பிளஸ்-2 துணைத்தேர்வுகளுக்கு ‘ஹால்டிக்கெட்’ இன்று வெளியீடு..

கொரோனா பெருந்தொற்று காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது.இதன் காரணமாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், அதில் திருப்தி இல்லாதவர்களுக்கும், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தவர்களுக்கும் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.இதில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச்சீட்டு) 31-ந்தேதி (இன்று) காலை 11 மணி முதல் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு துணைத்தேர்வு வருகிற 6-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச்சீட்டு) 31-ந்தேதி (இன்று) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விண்ணப்ப எண் இல்லாத காரணத்தினால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியீடு ..

Sat Jul 31 , 2021
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஜூன் மாதப் பருவத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமானது 2002 ஆம் ஆண்டு ‘எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் கல்வி’ என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் எனப்படும் பருவத் தேர்வுகள், ஜூன் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டன. அதில், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வை எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் […]
Tamilnadu-open-university-2021

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய