
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்தது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பார்வையாளர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா 9 தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்றைய நிலவரப்படி பதக்கப் பட்டியலில் 9 தங்கப் பதக்கங்களுடன் சீனா முதலிடம் வகிக்கிறது( 5 வெள்ளி, 7 வெண்கலம் உள்பட சீனா மொத்தம் 21 பதக்கங்களை வென்றுள்ளது) அமெரிக்காவும் 21 பதக்கங்களை வென்ற நிலையில் 8 தங்கங்களை வென்றுள்ளது.அமெரிக்காவை போலவே ஜப்பானும் இதுவரை 8 தங்கங்களை வென்று அசத்தியுள்ளது. இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 35-வது இடத்தில் உள்ளது.
