
நடிகர் சூரி தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.270 கோடி மோசடி ஏமாற்றியதாக திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .இதில் ரமேஷ் என்பவர் நடிகர் விஷ்ணுவிஷால் தந்தை ஆவர் .
நடிகர் சூரி வீர தீர சூரன் படத்தில் நடித்தார் ,அவர் வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக சம்பளம் கொடுக்கப்பட்டது ,அதில் ரூ.40 லட்சம் பாக்கி இருந்ததும் ,அந்த பணத்தை திருப்பி கேட்டபோது பணத்திற்கு பதிலாக நிலம் வாங்கி தருவதாக கூறி கூடுதல் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர் என புகார் அளித்துள்ளார் .
இந்த புகாரை பற்றி நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் .அவர் கூறியதாவது நடிகர் சூரியின் புகார் ஆனது அதிர்ச்சியளிப்பதாகவும் மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார் .நடிகர் சூரி தன விஷ்ணு விஷால் ஸ்டுடியோவுக்கு பணம் தர வேண்டும் எனவும் ,அவர் 2017 ஆண்டு கவரிமான் பரம்பரை என்ற படத்திற்காக முன்பணம் பெற்றதாகவும் ,அந்த படம் சில காரணங்களுக்காக நின்றதாகவும் ,அவர் பெற்ற முன்பணத்தை திருப்பி தரவில்லை எனவும் கூறினார் .
சட்டம் மற்றும் நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் ,சட்டத்தின் வழியே தாம் செல்வதாகவும் தனது வலை தளத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்தார் .பின்னர் ரசிகர்களும் மற்றும் நல விரும்பிகளும் உண்மை வரும்வரை காத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் .