
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் (திங்கள்கிழமை – ஜூலை 26) தொடங்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.மேலும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, செப்டம்பா்14-ஆம் தேதி முதல் அக்டோபா் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு திங்கள்கிழமை (ஜூலை 26) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.மேலும் இன்று முதல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆக.24-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- கலந்தாய்வின் முதல் கட்டமாக சிறப்புப் பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகியோருக்கு, செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
- இதனைத் தொடா்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- துணை கலந்தாய்வு அக்டோபர் 12 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- எஸ்சிஏ, எஸ்சி பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 18 முதல் அக்டோபர் 20 தேதி வரை நடைபெறுகிறது.
- பொறியியல் படிப்புகளுக்கான அனைத்து கலந்தாய்வையும் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் இணைய வழியில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
- விண்ணப்பப் பதிவு தொடக்க நாள் – ஜூலை 26
- விண்ணப்பிக்க கடைசி நாள் – ஆகஸ்ட் 24
- சமவாய்ப்பு எண் வெளியீடு – ஆகஸ்ட் 25
- தரவரிசைப் பட்டியல் வெளியீடு – செப்டம்பர் 4