ஐசிஎஸ்இ 10 மற்றும் ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ,ஒத்திவைக்கப்பட்டும் இருந்தன. சிஐஎஸ்சிஇ கவுன்சில் ஆனது கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு (ஐசிஎஸ்இ), 12ம் வகுப்பு (ஐஎஸ்சி) தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு தேர்வுகளின் முடிவுகளை கணக்கில் கொண்டு தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.இதனடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஐசிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் cisce.org அல்லது results.cisce.org ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ஐ.சி.எஸ்.இ தேர்வை 2,909 மாணவர்களும், 2,554 மாணவிகளும் எழுதினர். இதில் 99.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும் ஐ.எஸ்.சி தேர்வைப் பொருத்தவரை, இந்த ஆண்டு 1,418 மாணவர்களும் 1,393 மாணவிகளும் பங்கேற்றனர்.இதில் 99.76 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடக்கம் ..

Mon Jul 26 , 2021
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் (திங்கள்கிழமை – ஜூலை 26) தொடங்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.மேலும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, செப்டம்பா்14-ஆம் தேதி முதல் அக்டோபா் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு திங்கள்கிழமை (ஜூலை 26) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.மேலும் இன்று முதல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யலாம் […]
Engineering-admissions-2021

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய