
நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்திருந்தார்.மேலும் இன்று மாலை 5 மணி முதல் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வானது முன்னதாக 155 நகரங்களில் நடத்தப்பட்டு வந்த நிலையில் , தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை 198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தவேண்டாம் என பல அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தாலும், வரும் நீட் தேர்விற்கு தயாராகும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.