
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு தொடங்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு தான் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நடைப்பெற்று வருவதாக எழுந்த தகவலின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் மாநில பாடத் திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படுவதன் காரணமாக, ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகே கல்லூரி மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் வழக்கமான சேர்க்கை முறையே தொடரும் என்று கூறியுள்ளார்.பின்னர்,முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் சலுகைகள் வழக்கம் போல தொடரும் என்று தெரிவித்துள்ளார்.