
பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு ஜூன் 30 வரை கால வரம்பை நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.
இதன்படி, பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.