
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் முதல் விமானந்தாங்கி கப்பல் ஐஎன்ஸ் விக்ராந்த் ஆகும் .இந்த விமானந்தாங்கி கப்பல் ஆனது கொச்சி கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது.
இந்தியா தயாரித்துள்ள முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு கற்படையில் இணைக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இவர் கொச்சி கடற்படைத் தளத்தில் உள்ள விமானந்தாங்கி கப்பலை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் இந்த விமானந்தாங்கி கப்பல் இந்தியாவின் பெருமை என்றும், சுயசார்பு இந்தியாவின் சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.