
‘விண்டோஸ் 11’ இயங்குதளத்தை(ஓ.எஸ்) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு வருடத்திற்கு பிறகு தற்போது அறிமுகம் செய்யவுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்துள்ள விண்டோஸ் 11 இயங்குதளத்தை முந்தைய விண்டோஸ் 10 பயனர்கள் இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளத்தில் பயனர்கள் எளிதில் உபயோகிக்கும் வகையில் அழகாகவும், புதுமையாகவும் இருக்கும்.இந்த இயங்குதளத்தில், ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் உள்ளிட்டவை எளிதில் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்டோஸ் 11 இயங்குதளத்தில், வன்பொருள் தனது முழு திறனையும் செயல்படுத்தும் வகையில், கேமிங் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் சிறம்பம்சமாக புதிதாக டாஸ்க் பாரில் சாட் பாக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் , எளிதாக மெசேஜ், விடியோ கால், ஆடியோ கால் உள்ளிட்டவை எளிதாக செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.