
தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அரங்கில் தொடங்கியது.
2021 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடங்கி வைத்தார்.ஆளுநர் உரையில்,,
- தமிழகத்தில் தற்போது வழங்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- தொழில் நிறுவனங்களில் பணியாளர்களால் செலுத்தப்படும் தொழில்வரியை செலுத்த 2 மாத கால அவசாகம் வழங்கப்படும்.
- அரசுப் பணிகள் மற்றும் அரசுப் பதவிகளில் தமிழ்நாட்டினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- மாநிலத்தில் உள்ள அனைத்து மின்நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதே அரசின் நோக்கம்.
- மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு அடுத்த 15 நாள்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட தீா்மானங்கள் என்னென்ன ?
தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் தொடா்பாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
- காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சி,
- நீட் தோ்வு,
- ஏழு போ் விடுதலை,
- செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு வருவது..
மேற்குறிப்பிடப்பட்ட இந்தத் தீா்மானங்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட உள்ளன.