
கேனான் நிறுவனமானது ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.கேனான் நிறுவனம் தனது ஊழியர்களின் நலனுக்காக இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள உள்ள ‘கேனான்’ தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் ‘சிரிப்பை ஸ்கேன் செய்யும்’ கேமரா ஒன்று புதிதாக அறிமுகமாகியுள்ளது.
ஊழியர்கள் அலுவலகத்துக்குள் நுழையும்போது தங்களது சிரித்த முகத்தை காண்பித்தால் மட்டுமே இது உள்ளே நுழைய அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் பணி நேரத்தில் 100 சதவீதம் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய விரும்பும் நோக்கில் இதனை அறிமுகப்படுத்தியுள்ளதாக கேனான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘கேனான்’ நிறுவனம் சிரிப்பை ஸ்கேன் செய்யும் ஒரு தொழில்நுட்பத்தை தன்னுடைய ஊழியர்களின் நலன் கருதி அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும், இவை முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தைவிட மிகக் குறைவான ஆபத்தையேக் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.