
விண்டோஸ் 10-க்கான ஆதரவை 2025 உடன் முடிவுக்குக் கொண்டுவருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் ,விண்டோஸின் அடுத்த பதிப்பை விரைவில் அறிமுகப்படுத்தத் ஆயத்தமாக வருவதன் காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸை தொடர்ந்து புதுப்பித்து அடுத்தடுத்த வெர்ஷனை பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தி வருகிறது.
விண்டோஸ் 10-யை கடந்த ஜூலை 29, 2015 அன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து விண்டோஸின் அடுத்த புதிய பாதிப்பை வருகிற ஜூன் 24 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முந்தைய பதிப்பான விண்டோஸ் 10-க்கான ஆதரவை வருகிற அக்டோபர் 14, 2025 உடன் முடிவுக்குக் கொண்டுவருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.