
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு இலவச பட்டயக் கணக்காளா் பயிற்சி (சிஏ) இணையவழியில் இன்று தொடங்கவுள்ளது.
தென்னிந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தலைவா் கே.ஜலபதி வெளியிட்ட அறிவிப்பில்..
சிஏ தோ்வுக்கு தென்னிந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பாண்டில் நவம்பரில் நடத்தப்படவுள்ள சிஏ தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று புதன்கிழமை (ஜூன் 9) தொடங்கி அக்.10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏ பயிற்சி வகுப்புகள் தினமும் 5 மணி நேரம் இணைய வழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.9,500 செலுத்த வேண்டும். குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மற்றும் கரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோா்களின் குழந்தைகள் கட்டணமின்றி இலவசமாகப் சிஏ பயிற்சியை peralam என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மாணவா்கள் https://www.sirc-icai.org/view-batches.php என்ற இணைய முகவரியில் சென்று பயிற்சி வகுப்பை பெற பதிவுசெய்யலாம். மேலும் விவரங்களை பெற 7358506400, 82205 22669, 96771 26011 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.