
கொரோனாவின் இரண்டாவது அலையானது இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் ,தற்போது அதன் தாக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்.கொரோனா வைரஸ் ஆரம்ப நிலையில் காது, மூக்கு, தொண்டையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.
- கொரோனா வைரஸ் தொற்று மூக்கு பகுதியில் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகளாவன மூக்கு ஒழுகுதல், மூக்கு அடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சினை போன்றவை மூக்கு பகுதியில் ஏற்படும் முக்கியமான பாதிப்புகளாகும்.
- கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலும் மீண்ட ஒருவருக்கு வாசனையில் ஏற்படும் பாதிப்பு பூரணமாக குணமடைவதை தற்போது காணமுடிகிறது.
- கொரோனா தொற்றின் காரணமாக தொண்டையில் புண், எரிச்சல், அடைப்பு, தொண்டை சதை வீக்கம்(டான்சில்ஸ்) போன்றவை பரவலாகப் ஏற்படுகிறது.
- மேலும் வைரஸ் தொற்றால் தலைவலி, தலைபாரம், உடல் வறட்சி, சோர்வு, ஆகியவையும் ஏற்படுகிறது. இது தவிர நாக்கில் சுவை உணர்வில் பாதிப்பு உண்டாகிறது .
- கொரோனா நோயாளிகளுக்கு வாசனை மற்றும் சுவையில் 40 சதவீதம் மாற்றம் உள்ளதாக அறிக்கை உள்ளது. சில நோயாளிகளுக்கு காது கேளாமை, காது மற்றும் மூளை நரம்புகள் பாதிப்பு உள்ளதால் காதுகேளாமை வரும் வாய்ப்புகளும் அதன் தாக்கமும் முற்றிலும் அறியப்படவில்லை.