
தமிழகக்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.இன்றைய நிலவரப்படி ,கடந்த 24 மணி நேரத்தில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகக்தில் இன்று 1,74,112 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .இவற்றில் இன்று புதிதாக 36,184 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 5,913 போ் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இதைத்தொடர்ந்து கோவையில் 3,243 பேருக்கும், செங்கல்பட்டில் 2,226 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
