
உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 260 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள்களை தொடர்ந்து விண்ணுக்கு அனுப்பி வருகிறது.இதுவரை பல கட்டங்களாக 1500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று பால்கான்-9 ராக்கெட் மூலம் 52 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கேனவெரலில் இருந்து விண்ணுக்கு செலுத்தியது.இந்த அணைத்து செயற்கைக்கோள்களும், முன்பு அனுப்பப்பட்ட செயற்ககைக்கோளுடன் இணைத்து செயல்பட உள்ளது .
இது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள்களை தொடர்ந்து ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.