
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகக்தில் கொரோனவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கும் ,தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. எனினும் ,ஊரடங்கை பொதுமக்கள் அனைவரும் சரிவர கடைபிடிக்காததால் தமிழக அரசு மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது.இந்நிலையில் நேற்று தமிழகக் அரசால் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.இதன்படி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன,அவை இன்று முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு :
1.இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்கள் விநியோகிக்க காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி
2 .ஏடிஎம் மையங்கள் ,பெட்ரோல்,டீசல் பங்குகள் எப்போதும் வழக்கம் போல் செயல்படும்.
3.ஆங்கிலம் மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படும்.
4.காய்கறி ,பூ ,பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை .
5.தேநீர் கடைகள் செயல்பட அனுமதி இல்லை
6 .மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி
7.மே 17 முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும்,வெளியேயும் பயணிக்க இ-பதிவு சான்றிதழ் கட்டாயம்
8 .திருமணம் ,மருத்துவ சிகிச்சை ,மற்றும் இறப்புக்கு செல்ல இ-பதிவு செய்திருக்க வேண்டும்
9 .வெளி மாநிலங்கள் ,வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு கட்டாயம்.
10 .இரவு ஊரடங்கு ,நாயிறு முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.