
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ,மாநில அரசுகள் இணைந்து கடுமையாக போராடி வருகின்றன.இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது.அதேசமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,40,46,809 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,00,79,599 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,62,317 ஆகும் .
இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 37,04,893 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 17,92,98,584 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.