
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான சூழலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனாவின் முக்கியமான அறிகுறியாக மூச்சுத்திணறல் கருதப்படுகிறது. ஒரு சிலர் லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன், தங்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுமோ எனக் கருதி, ஆக்சிஜன் சிலிண்டர்களை வீட்டில் வைத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
ஆக்சிமீட்டர் கருவியில் 92 அல்லது 90 என்ற அளவு வந்தாலே தனக்கு ஆக்சிஜன் உதவி தேவை என்று எண்ணிவிடுகின்றனர்.
ஆக்சிஜன் சிலிண்டர் உதவி யாருக்கு தேவைப்படும்?
ICU -வில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்சிமீட்டரை கையில் பொருத்தி அவ்வப்போது அவர்கள் உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வாறு இருக்கிறது என்பது கண்காணிக்கப்படுகிறது. அவர்களுக்கு மட்டும் சிலிண்டர் பொருத்தி செயற்கை சுவாசம் தரப்படுகிறது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஆக்ஸிஜன் செறிவு நிலை (oxygen saturation level) 85 சதவீதத்தை விட குறைந்தால்தான் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது.
ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மற்றும் சீராக வைப்பதறகான வழிமுறைகள் :
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுவிடுமோ என்று எண்ணி ஆக்சிஜன் தேவையை நாடுகிறார்கள் .இவரால் அனைவரும்,மூச்சை ஆழமாக உள்ளே இழுப்பது, வெளியேற்றுவது, எளிமையான மூச்சு பயிற்சிகளை செய்யவேண்டும்.
- மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு பிரச்சனை ஏற்படுவது போல தோன்றினால், குப்புறப்படுக்க வேண்டும்.குப்புற படுக்கும்போது மூச்சை இழுப்பது அதிகரிக்கும் மற்றும் ஒரு சில நிமிடங்கள் இருந்தால் போதும், ஆக்சிஜன் அளவு விரைவில் கூடிவிடும்.
- கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் எளிய உடற்பயிற்சிகளை செய்தலே , உடலில் சூடு அதிகரித்து, மூச்சு சீராகி நீங்கள் எளிதில் குணமடையலாம் .
- கொரோனா பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்ட பல கொரோனா நோயாளிகளுக்கு எளிதான மூச்சு பயிற்சிகள் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்துள்ளதாக இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராசனம் :
மகாராசனம் என்பது மூச்சு பயிற்சிக்கான சிறந்த ஆசனமாகும்.இந்த ஆசனத்தை பலமுறை செய்வதன் மூலம் மூச்சு மெதுவாக சீராகி,மனவலிமையானது அதிகரிக்கக்கூடும்.
லிங்க முத்திரை:
லிங்க முத்திரை என்பது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. நோயாளிக்கு தனது உடலில் தன்னை சரி செய்து கொள்வதற்கான தன்மை உள்ளது என்பதை உணர்த்தும் ஆசனமாகும்.கொரோனா தொற்று ஆரம்பநிலையில் உள்ளவர்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மகாராசனம், லிங்க முத்திரை ஆகியவற்றை ஐந்து நிமிடங்கள் செய்ததால் அவர்களின் மூச்சு சீராகி எளிதில் குணமடையலாம்.