தமிழகத்தில் மே 6 முதல் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமல் ..

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை மே 6 முதல் அமல் படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதை அடுத்து மே 6 முதல் மே 20 ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமலுக்கு வர இருக்கும் புதிய கட்டுப்பாடுகள் :

*தமிழகத்தில் காய்கறி, மளிகைக்கடை, தேனீர் கடைகள் மே 6ஆம் தேதி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமான நிலையம் / ரயில் நிலையம் செல்ல மட்டுமே உபயோகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*ரயில், மெட்ரோ மற்றும் தனியார் பேருந்துகளில் 50% பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

*கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளைச் சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

*ஊடகம் மற்றும் பத்திரிக்கைத் துறை நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

*பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*மேலும்,முன்பு கடைபிடிக்கப்பட்டிருந்த இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் ஒரே நாளில் 3,57,229 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Tue May 4 , 2021
இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் தற்போது 3 வது நாளாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15.41 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் […]
coronavirus-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய