
இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பல பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதோடு,ஒத்திவைக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில்,வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு (மெயின் தேர்வு) ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை(NTA) அறிவித்துள்ளது. கொரோனா அதிவேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ மெயின் தேர்வுகளுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும்,திருத்தப்பட்ட புதிய தேதிகள் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
