
இந்தியாவில் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் முழு பொதுமுடக்கம் மற்றும் இரவு நேர பொதுமுடக்கத்துடன் கூடிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.20 கோடியைத் தாண்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆகும் .கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,44,178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 19,29,329 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 12,38,52,566 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது கொரோனா புதிய கட்டுப்பாடுகள்
One thought on “இந்தியாவில் புதிய உச்சமாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று”
Comments are closed.