
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு, நாளை மறுநாள் (18.04.2021) நடக்க இருந்த நிலையில்,தற்போது ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும் முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் எம்.டி.(M.D),எம்.எஸ்.(M.S) போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.இந்நிலையில் நடப்பாண்டிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு நாளை மறுநாள் நடைபெற இருந்தது.ஆனால்,நாடு முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகத்தில் பரவி வருகிறது.எனவே, இளம் மருத்துவர்களின் நலனை கருத்தில்கொண்டு ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மேலும் கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் வைத்து, முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.மேலும்,இந்தத் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் குறித்த அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.