
UPI செயல்முறை :
UPI என்பது ஒரு ஒரு நிகழ்நேர கட்டண முறையாகும்,(UPI – Unified Payments Interface).பணப் பரிவர்த்தனைக்கு உங்கள் வங்கிக் கணக்கை UPI பயன்பாட்டுடன் இணைக்க வேண்டும்.இதன் மூலம் ,UPI மொபைல் பயன்பாட்டை பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணத்தை எளிதில் மாற்றலாம்.மேலும்,ஒரு UPI பயன்பாட்டின் மூலம் பல வங்கி கணக்குகளை இயக்கலாம்.
பொதுவாக நாம் ATM -ல் இருந்து பணத்தை எடுப்பதற்கு debit card -ஐ பயன்படுத்த வேண்டும்.தற்போது இனி அந்த அவசியம் இல்லை.UPI ஆப் மூலம் இனி ATM -ல் இருந்து பணத்தை எடுக்கலாம்.
ATM நிறுவனமான என்.சி.ஆர் கார்ப்பரேஷன் சமீபத்தில் சிறப்பு UPI இயங்குதளத்தின் அடிப்படையில் முதல் ICCW தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.என்.சி.ஆர் கார்ப்பரேஷனுடன் (NCR Corporation) தற்போது சிட்டி யூனியன் வங்கி கைக்கோர்த்து, இதுவரை 1500 புதிய ஏடிஎம்களை மேம்படுத்தியுள்ளன.
புதிய ஏடிஎம்களிலிருந்து பணத்தை பெறுவது எப்படி?
புதிய ATM இல் இருந்து பணத்தை எடுக்க, முதலில் யுபிஐ பயன்பாட்டை ஸ்மார்ட்போனில் (GPay, BHIM, Paytm, PhonePe, Amazon) திறக்க வேண்டும். பின்னர், ATM திரையில் காட்டப்படும் QR code -ஐ ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேனிங் முடிந்த நிலையில், நீங்கள் எடுக்க வேண்டிய பணத்தை உள்ளிட வேண்டும், பின்னர் Proceed க்கான button -ஐ அழுத்த வேண்டும். பிறகு உங்களிடம் 4 அல்லது 6 இலக்க UPI PIN கேட்கப்படும்,எண்களை உள்ளிட்டவுடன் ATM இல் இருந்து பணத்தை பெறலாம்.தொடக்கத்தில், இதில் நீங்கள் 5 ஆயிரம் ரூபாயை மட்டுமே எடுக்க முடியும்.