
NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 16 இடங்களில் உள்ள ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வானது வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்விற்கு நாடு முழுவதும் சுமார் 1304 பங்கேற்க உள்ளனர்.
தற்போது,இந்திய முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் NIFT பேராசிரியர் பணிக்கான தேர்வு டெல்லியில் மட்டும் நடைபெறும் என்ற அறிவிப்பு தேர்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா காலத்தில் டெல்லி சென்று தேர்வெழுதுவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என கோவை ,சென்னை மற்றும் மதுரையை சார்ந்த தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். NIFT பணித்தேர்வை டெல்லியில் மட்டும் நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.