பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாகவுள்ள மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிதாக 535 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.இத்தேர்விற்கு ஆன்லைன் மூலம் தகுதி உடையவரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

காலியிடங்கள்: 535
01.Manager (Risk) MMGS-II – 160
02. Manager(Credit) MMGS-II – 200
03. Manager(Treasury) MMGS-II – 30
04. Manager (Law) MMGS-II – 25
05. Manager (Architect) MMGS-II – 02
06. Manager (Civil ) MMGS-II – 08
07. Manager(Economic) MMGS-II – 10
08. Manager(HR) MMGS-II – 10
09. Senior Manager (Risk) MMGS-III – 40
10. Senior Manager (Credit) MMGS-III – 50
தேர்வு செய்யப்படும் முறை:
காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது .பின்னர் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .இறுதியாக தகுதியுடையவர்கள் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் பணியமர்த்த படுவார்கள் .
தகுதி :
முதுகலை பட்டம், எம்பிஏ, பி.டெக், சிஏ, ஐசிடபுள்ஏ பட்டம் முடித்தவர்கள் இக்காளிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .
வயது வரம்பு :
மேலாளர் : மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது .
மூத்த மேலாளர் : மூத்த மேலாளர் பணிக்கு வயது வரம்பு 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் அருந்ததியர் ஆகியோர் ரூ .175 செலுத்த வேண்டும்.மற்ற பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ .850 செலுத்த வேண்டும் .