நாடு முழுவதும் இன்று புதிதாக 40,715 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 29,785 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பானது ௧௨.௪௩ கோடியை தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 40,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,86,796 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 199 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,81,253 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,166 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 3,45,377 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும் இதுவரை 4,84,94,594 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கூடுதல் மையங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Tue Mar 23 , 2021
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் மையங்களை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலைமையானது ஏற்படுகிறது.இதன் மூலம் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.மேலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 28 மையங்களும், புதுச்சேரியில் ஒரு மையமும் மட்டுமே இருக்கிறது.இந்த தேர்வு […]
Neet-Exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய