
இந்தியாவில் கொரோனா தாக்கமானது தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா சுமார் 10 மாதங்களாக உலகையே ஆடி படைத்தது.கொரோனாவின் பிடிக்கு ஏராளமானோர் பலியாகினர்.பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததன் காரணமாக பலரும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் ,அலட்சியமாக இருந்து வந்தனர்.தற்போது மேலும் கொரோனாவின் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதனிடையே இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்று பல நாடுகளுக்கும் பரவியது.இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.உருமாறிய கொரோனா இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது,இதில் உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் 2-வது அலை உருவாதற்கு மக்களாகிய நாமே காரணம்.இந்தியாவில் கொரோனா தொற்று இல்லை என்று நினைத்து முறையான கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததே இதற்கு காரணம் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.