
நாம் அன்றாட வாழ்வில் காலை உணவாக இட்லியை எடுத்துக்கொள்வது ஒரு இயல்பான விஷயமாகும் .பொதுவாக காலையில் ஆவியில் வேக வைத்த உணவை உட்கொள்வது உடலுக்கு நல்லது என்பார்கள் .இட்லியை விரும்பி உண்பவர்கள் ஏராளம் ..மற்றும் இட்லியின் மற்றுமொரு வகையான குஷ்பூ இட்லியை நாம் அனைவரும் அறிந்துருப்போம்,ஆனால் அது ஒரு அறிய வகை உணவாகவே இருந்து வருகிறது .நாம் குஷ்பூ இட்லியை பொதுவாக பெரிய ஹோட்டல்களிலும் ,பல விசேஷமான நிகச்சிகளிலும் கண்டிருக்கிறோம் ..நம்முடைய வீட்டில் குஷ்பூ இட்லியை அதன் தன்மை குறையாமல், மென்மையாக ,கலப்படம் இல்லாமல் செய்யவது எப்படி என்று இந்த பதிவில் நாம் விரிவாக காண்போம் ..
செய்முறை :1
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி – 4 கப் (தேவையான அளவு )
உளுந்து – 1 கப்
ஜவ்வரிசி – 1 /2 கப்
வெந்தயம் – 1 /4 ஸ்பூன் அளவு
(வெந்தயம் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம் ,வெந்தயம் சேர்க்காமல் செய்தால் இட்லி முழு வெண்ணிறமாக இருக்கும் )
அரிசி, உளுந்து, ஜவ்வரிசி மூன்று பொருட்களையும் தனித்தனியாக ஊற வைத்துவிட வேண்டும்.
வெள்ளை இட்லி அரிசியை வாங்கி கொள்ளுங்கள ,நீங்கள் எந்த அளவில்(கப்) இட்லி அரிசியை எடுத்தீர்களோ அதே அளவில் உளுந்தையும்,ஜவ்வரிசியையும் எடுத்துக்கொள்ளுங்கள் .
அரிசியையும் மற்றும் ஜவ்வரிசியையும் குறைந்தது 7 மணி நேரம் ஊறவைக்க வேண்டும் ,1 மணி நேரம் உளுந்து ஊற வைத்தால் போதுமானது .
செய்முறை :2
பின்னர் ஊறவைத்த அரிசியையும் ,ஜவ்வரிசியும் கிரைண்டரில் ஒன்றாக போட்டு கொஞ்சம் மொழு மொழு வென்றுஅரைக்க வேண்டும் .குஷ்பு இட்லிக்கு மாவு நைஸாக தான் இருக்க வேண்டும். மாவையும் கொஞ்சம் கெட்டிப் பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஊறவைத்த உளுந்தையும் நன்றாக மாவு பொங்கும் அளவிற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் .
செய்முறை :3
அரைத்த அரிசி ,ஜவ்வரிசி மற்றும் உளுந்து மாவை ஒன்றாக கலந்து ,அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து உங்கள் கைகளாலேயே கரைத்து விடுங்கள் .மாவு குறைந்தது 8 மணி நேரம் நன்றாக புளிக்க வைக்க வேண்டும் .நன்றாக புளித்த மாவை கலக்கி விட்டு பின்னர் எப்பொழும்போல் இட்லியை ஊற்றி வைத்து பாருங்கள் .இட்லி மெது மெது வென்று குஷ்பூ இட்லியை போன்று இருக்கும் ..பஞ்சு போன்ற இட்லியை பந்தாட ஆர்வமாக இருங்கள் .இன்றே அரிசியை ஊறவைத்து செய்முறையில் படி இட்லியை சமைத்து ,சுவைத்து உண்ணுங்கள் ….