நாசாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி : பெர்சிவெரென்ஸ் ரோவர் திட்டம் – ஸ்வாதி மோகன்

செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சிவெரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை நாசா கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது.இந்த பெர்சிவெரென்ஸ் ரோவர் திட்டத்தின் இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக விளங்கியவர் ,இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாதி மோகன் ஆவர்.தற்போது ஸ்வாதி மோகனின் பங்களிப்பானது இந்திய திருநாட்டிற்கு புகழையும் ,பெருமையையும் சேர்த்துள்ளது .

நாசாவின் புரொபல்சன் லேபரேட்டரியை வழிநடத்தும் குழு தலைவராக தற்போது சுவாதி மோகன் உள்ளார்.பெர்சிவெரென்ஸ் ரோவர் செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தியை உறுதிப்படுத்தியவரும் இவரே ஆவர்.

இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட ஸ்வாதி மோகன் அவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பிறந்தார்.சிறு வயதிலேயே தன் பெற்றோருடன் அமெரிக்காவிற்கு சென்றார்.சிறுவயது முதலே அவரது கவனம் முழுவதும் விண்வெளியின் பக்கம் திரும்பியது.இதனை தொடர்ந்து விண்வெளித்துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார்.மேலும் விண்வெளித்துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு அதில் டாக்டர் பட்டமும் பெற்றார்.

பெர்சிவெரென்ஸ் ரோவர் திட்டம்:

2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெர்சிவெரென்ஸ் ரோவர் திட்டத்தின் ஆரம்பம் முதலிலிருந்தே முழு ஈடுபாட்டுடன் செயல்பட ஸ்வாதி மோகன் ,ஜி.என்.சி எனப்படும் இயக்குதல் மற்றும் கட்டுபடுத்தல் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

தற்போது ஸ்வாதி மோகன் அவர்கள் சனி கிரகத்துக்கான பயணம் மற்றும் நிலவுக்கான பயண திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார் .ரோவர் வாகனமானது செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பில் எப்படி செயல்படவேண்டும் என்பதை வடிவமைத்தவரும் இவரே ஆவர் .இவர் விண்வெளி பயணத்தில் மேலும் பல சாதனைகளையும் ,புகழையும் ஈட்டவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

Next Post

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான (TNUSRB) - தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது..

Sat Feb 20 , 2021
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை இணையத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி காவல் ,சிறை ,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் காலியாக உள்ள மொத்தம் 11,813 பணியிடங்களுக்கான தேர்வை 37 மாவட்ட மையங்களில் நடத்தியது. இதற்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrbonline.org/ என்ற இணையத்தில் நேற்று மாலை (19.02..2021) வெளியிடப்பட்டது.தகுதிபெற்றவர்கள் 1:5 […]
TNUSRB-result-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய