
ஐக்கிய அமீரக விண்கலமானது செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது .இந்த விண்கலமானது கடந்த ஜூலையில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி ஐக்கிய அமீரக விண்கலம் செவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்தது .
செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த இந்த விண்கலம் ,செவ்வாய்கிரகத்தின் வடபுலத்தையும் ,அக்கிரகத்தின் மிகப்பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மான்சூம் -யும் படம் பிடித்து கடந்த புதன்கிழமை ஐக்கிய அமீரக விண்கல மையத்திற்கு அனுப்பி வைத்தது .தன் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் யுஏஇ அந்த புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது .