பெரியார் பல்கலைக்கழகத்தில் பயின்ற இளநிலை 2 ஆம் ஆண்டு,3 ஆம் ஆண்டு மற்றும் முதுநிலை 3 ஆம் ஆண்டு மற்றும் தேர்வு காலம் முடிந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன .
பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த தர்மபுரி ,நாமக்கல் ,சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயங்கும் கல்வி மையங்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர் .தற்போது கடந்த நவம்பர் -டிசம்பர் மாதத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பெரியார் பல்கலை கழகத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ளது .
பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் அவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் இன்று வெளியிட்டார் .மாணவர்கள் தேர்வு முடிவுகளை பெரியார் பல்கலைக்கழக இணையதளத்திலும் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளிலும் தெரிந்து கொள்ளலாம் .
தேர்வு முடிவுகளை அறிய .http://etech.periyaruniversity.ac.in/periyar_univ_result/ என்ற இணைய பக்கத்தை அணுகவும்.