
விஜய் சேதுபதி நடித்துள்ள தெலுங்கு படமான உப்பெனா என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது .2019 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி சைரா நரசிம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் .அதன் பிறகு உப்பெனா என்ற மற்றொரு தெலுங்கு படத்தில் நடித்து , மீண்டும் நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் . இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது .
இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான உப்பெனா படத்தில் பஞ்சா வைஷ்ணவ் தேஜ்,கீர்த்தி ஷெட்டி போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.