
தற்போதைய காலக்கட்டத்தில் முறையற்ற உணவுப்பழக்க வழக்கங்களாலும் ,நவீன உணவு வழக்கங்களாலும் நாம் அனைவரும் உடல் பருமன் அதிகரிப்பதை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம்.
உடல் பருமன் அதிகரிப்பால் நாம் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம்.குறிப்பாக இதயம் ,மூளை ,நுரையீரல் ,எலும்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் .உடல் பருமனை குறைக்கவும் ,கட்டுப்படுத்தவும் பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர் .உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லுதல் ,டயட் உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் போன்ற செயல்கள் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது .உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வபவர்கள் குறுகிய காலத்தில் உடல் பருமனை குறைத்து விடலாம் என்ற எண்ணத்தில் சென்று ,பின்னர் முழு முயற்சியில் ஈடுபடமால் அதை கைவிடுவதும்.
முறையான பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தல்
நம் அன்றாட வாழ்வில் முறையான ,சரியான பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே உடல் பருமனை கட்டுக்கோப்பாகவும் ,கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் .தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதும் ,நொறுக்கு தீனிகளையும்,எண்ணெய் சார்ந்த அதிக உணவுப்பொருட்களை எடுப்பதையும் தவிர்த்தல் நல்லது .
உடலுக்கு வலுவை சேர்க்கக் கூடிய ,எனர்ஜி தரக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது .முறையற்ற பழக்கவழக்கங்களை தவிர்த்து ,முறையான பழக்க வழக்கத்தை மேற்கொள்ளவது உடல் பருமனை சீராக வைத்திருக்க உதவுகிறது .உடலுக்கு நன்மை தரக்கூடிய பழ சாறுகளையும் ,காய்கறி வகைகளை எடுத்துக்கொள்வதும் ,அதிகமாக தண்ணீரை உட்கொள்வதும் ஒரு தொடர் பழக்கமாக எடுத்துக்கொண்டாலே உடல் பருமன் நன்றாக இருக்கும்.பல்வேறு உடல் பிரச்சனைகளும் நீங்கும் .
விடா முயற்சி
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்ற சொல்லிற்கு ஏற்ப தொடர் முயற்சியின் மூலமே பல வெற்றிகளை ஈட்டமுடியும் ,அதேபோல் தொடர் முயற்சியினை மேற்கொண்டால் உடல் பருமனை குறைக்கலாம்.உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம் என எண்ணி விடாதீர்கள் ? சிலர் சில நாட்கள் மட்டுமே உடற்பயிற்சியை மேற்கொண்டு உடல் எடை குறைந்து விட்டதா என எண்ணுவார்கள் …குறுகிய காலத்தில் பலனை எதிர்பார்க்கும் எண்ணத்தையும் கைவிட வேண்டும் ..உடல் எடையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு ,முழு மனதோடும் ,விடா முயற்சியோடும் செயல்பட்டால் உடல் எடையை குறைக்கலாம் .
உணவுக் கட்டுப்பாடு
நம் உடலுக்கு உறுதியை தருவது ஆரோக்கியமான உணவாகும் .நோய்க்கு உணவு மருந்து என்ற சொல்லிற்கு ஏற்ப ,ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் நலத்தையும் உடல் பருமனையும் பேணிக்காத்தல் அவசியமாகும் .நம் உண்ணும் உணவை கட்டுப்பாடின்றி எடுத்துக்கொள்வதினாலும் ,அளவிற்கு குறைவாக எடுத்துக்கொள்வதினாலும் உடற் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் . சரியான நேரத்தில்,சரியான உணவுகளை எடுத்துக்கொண்டாலே ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் .எனவே ஆரோக்கியமான ,கட்டுக்கோப்பான உடலை பெற வேண்டுமானால் உணவுக் கட்டுப்பாடு என்பது மிக அவசியமாகும் .
உடல் உழைப்பு
நம் தினசரி நாட்களில் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது மிக அவசியமாகும் .நம் செய்யும் அனைத்து செயல்களிலும் துரிதமாகவும் ,சுறுசுறுப்பாகவும் செயல்படுதல் உடலுக்கு நன்மையை தரும் .சுறுசுறுப்பாக நடப்பதும் ,செயல்படுவதும் ,கடினமாக உழைப்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு சிறந்த யுக்தியாகும்.
காலத்தின் வேகத்திற்கும் ,மாற்றத்திற்கும் ஏற்ப நம் அனைவரும் அவரவர் உடல் நலத்தின் மீது முழு கவனம் மேற்கொள்ளுதல் அவசியமாகும் .விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்தை விட,நோய்களின் வளர்ச்சியானது மிக வேகமாக செயல்பட்டு வருகிறது ,கொரோன வைரஸ் உட்பட பல சான்றுகளை எடுத்துக்கொள்ளலாம்.நோய்களின் தாக்கத்தை எதிர்கொள்ள நம் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு ,நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து ,நோயற்ற வாழ்வை பெறுவோம் ..