
நடிகர் சிபி ராஜின் நடிப்பில் உருவான கபடதாரி படத்தின் ட்ரெய்லர் வெளியானது .கபடதாரி படமானது கன்னட படமான கவலுதாரி படத்தின் ரீமேக் ஆகும் .இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார் .
கபடதாரி படத்தில் நடிகர் சிபி ராஜ் ,நந்திதா ,பூஜா குமார் ,நாசர் ,மயில்சாமி ,சுமன் ரங்கநாதன் மற்றும் ஜெயப்ரகாஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .இப்படத்திற்கு சைமன் கே. கிங் இசையமைத்துள்ளார் .யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படமானது விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஈர்த்துள்ளது ..